அதிசய சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழம் !





அதிசய சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழம் !

நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக் கூடிய தாகவும், மிகவும் குளிர்ச்சி யினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். 
சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம்
அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும். 

சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப் படுகின்றன. அதே போல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம்.

அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits – தமிழில் சர்க்கரை பாதாமி என்று அறியப்படுகிறது), 
பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.

இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. 

பித்தப் பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

பூர்விகம்
பூர்விகம்
இந்த பழங்கள் ஆரம்பத்தில் ஐரோப்பாவிற்கு ஆர்மேனியாவிலிருந்து கிரேக்கர்களால் கொண்டு வரப்பட்டது. கிரேக்கர்கள் அப்போது சுரியனின் தங்க முட்டைகள் என்று அழைத்துனர். 

இது ஆர்மேனியா விலிருந்து வந்ததால் இதன் தாவரவியல் பெயர் புருனஸ் ஆர்மெனைக்கா என்றாகியது. எனிதும் இதன் தாயகம் சீனாவாகும்.
இவைகள் தற்போது துருக்கி, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸபெயின், ரஷ்யா, கிரீஸ், அமெரிக்கா மற்றும் சீனாவில் அதிகமாக உற்பக்தியாகு கின்றன.
Energy48 Kcal
Carbohydrates11 gms
Dietary fiber2 gms
Fats0.4 gms
Protein1.4 gms
Vitamin A96 ug
Beta Carotene1094 ug
Lutein Zeaxanthin89 ug
Vitamin B10.03 mg
Vitamin B20.04 mg
Vitamin B30.6 mg
Folate9 ug
Vitamin B50.24 mg
Vitamin B60.054 mg
Vitamin C10 mg
Vitamin E0.89 mg
Vitamin K3.3 ug
Calcium13 mg
Magnesium10 mg
Iron0.4 mg
Phosphorus23 mg
Potassium259mg
Sodium1 mg
Manganese0.077 mg
Zinc0.2 mg
தோல் நோய்களை நீக்கும்:

தோல் நோய்களை நீக்கும்
இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. 

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. 
எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. 

இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. 

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்:
நரம்புகளை வலுப்படுத்தும்
பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. 

இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல், என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. 
பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்து கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி:
நோய் எதிர்ப்பு சக்தி
மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சில வகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. 

ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசித்துக் கொள்ளலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 

கொதித்து கெட்டியானதும், தீயை அணைத்து ஆற விடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கண் பார்வை தெளிவாகும்:
கண் பார்வை தெளிவாகும்
வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும், கட்டுப் படுத்தப்படும்.
மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் 4 ஆகிய வற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இரவில் படுக்கும் பொழுது சாப்பிட்டு வர பார்வை திறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.
Tags: