அருமையான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?

அருமையான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?

பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. 
கார்ன் முட்டை சூப் செய்வது
அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதும். 

நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக் கூடியவை. சரி இனி முட்டை  பயன்படுத்தி டேஸ்டியான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை :
மக்கா சோளம் – 500 கிராம்

சோள மாவு – 2 மேசைக்கரண்டி

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 2

பால் – 1 கப்

வெஜிடபிள் ஸ்டாக்கியூப் – 1

பட்டர் – 1 ஸ்பூன்

தண்ணீர் – 1/4 லிட்டர்

உப்பு, மிளகுப் பொடி – தேவைக்கேற்ப

அலங்கரிப்பதற்கு :

வெங்காயத்தாள் – சிறிதளவு,

முட்டை – 2.
செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் பட்டரைச் சூடாக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் 

சோளக் கலவையும் தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும். 

 நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, கார்ன் சூப்பை சூடாகப் பரிமாறலாம்.
Tags: