மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் !





மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் !

காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடும் உணவை காட்டிலும் மதிய நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்து கொள்ள வேண்டும். 
மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு
ஆனால், சாப்பிட கூடிய அந்த உணவின் தன்மையும், அதனால் கிடைக்க கூடிய ஊட்டச் சத்துக்களும் மிக முக்கியமாகும்.

மதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். 

இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடையில் ஏற்ற இறக்கம், மயக்கம் போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படும். 
அந்த வகையில் எந்தெந்த உணவுகளை நாம் மதிய நேரத்தில் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.

1. சூப்
சூப்
மதிய நேரத்தில் சூப் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி அதிகரிக்கும். 

இதனால் வழக்கமாக சாப்பிடும் உணவை காட்டிலும் அதிகமான உணவை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் அது உடல் பருமனை தான் உண்டாக்கும்.

2. ஜூஸ்
ஜூஸ்
வெறும் ஜுஸை மதிய வேளையில் சாப்பிடக்கூடாது. ஜூஸானது மிக விரைவாக பசியை உண்டாக்கி வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டி விடும். 
இதனால் இறுதியில் நாம் பெறுவது மோசமான உடல் ஆரோக்கியம் மட்டுமே.

3. நூடுல்ஸ், பாஸ்தா
நூடுல்ஸ், பாஸ்தா
சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கி யத்தை முழுவதுமாக பாதித்து விடும். 

இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்துவிடும்.

4. பர்கர்
பர்கர்
ஃபாஸ்ட் ஃபூட் உணவுகள் ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பர்கர், பீட்சா போன்ற உணவுகள் மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் சேரும். 
இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் இந்த உணவுகள் உண்டாக்கும்.

5. சான்விட்ச்
சான்விட்ச்
எப்போதுமே பிரட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமான கோளாறுகளை உருவாக்கும். முடிந்த அளவிற்கு நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

6. சாலட்ஸ்
சாலட்ஸ்
சாலட்டில் மிக குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்தில் எடுத்து கொண்டால்தான் நல்லது. அதனால், இந்த வகை உணவை மதிய நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

7. கொழுப்பு சத்து
கொழுப்பு சத்துள்ள உணவுகள் எப்போதுமே வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் மதிய உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள். 
கொழுப்பு சத்து
ஏனெனில் இது உங்களின் முழு ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டவை. 

கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இதய கோளாறு, மாரடைப்பு, உடல் பருமன், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

ஆரோக்கியம் அவசியம்

ஆதலால், மதிய நேரத்தில் சாப்பிடும் போது அவசியம் உணவில் கவனம் தேவை. 
ஆரோக்கியம் அவசியம்
நார்சத்து, நீர்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் எந்தவித உடல் நல கோளாறுகளும் உங்களுக்கு ஏற்படாது. 
மதிய உணவின் தன்மையும் மிக முக்கியம் என்பதை கவனத்தில் எடுத்து கொண்டாலே போதும்.
Tags: