செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

தேவையானவை :
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு -1/4 கப்

உப்பு -தேவைக்கு

எண்ணெய் -பொரிக்க‌

எண்ணெயில் வதக்கி அரைக்க‌
எண்ணெய் -1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் -10

பச்சை மிளகாய்- 2

காய்ந்த மிளகாய்- 2

சோம்பு- 1 டீஸ்பூன்

கசகசா -1 டீஸ்பூன்

தேங்காய்த் துறுவல் -2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி -1 சிறுதுண்டு

பூண்டுப்பல்- 4

கறிவேப்பிலை -1 கொத்து

பட்டை -சிறுதுண்டு

கிராம்பு -2
முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?
செய்முறை
செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை
1 வாழைக்காயை 4 ஆக நறுக்கி மஞ்சள்தூள் + முழ்குமளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறியதும் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும். இதனை மசித்த வாழைக்காயுடன் சேர்த்து உப்பு + பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும். உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு :
புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !
பொட்டுக்கடலை மாவுக்கு பதில் கடலை மாவினை வறுத்து சேர்க்கலாம். பட்டை கிராம்பு சேர்ப்பது வாசனையாக இருக்கும்.
Tags: