தேவையானவை: 

கேழ்வரகு மாவு – 4 ஸ்பூன் 

பால் – 1 கப் 

தண்ணீர் – அரை கப் 

ஏலத்தூள் – ஒரு சிட்டிகை 

நட்ஸ் பவுடர் – 1 ஸ்பூன் 

செய்முறை: 
நட்ஸ் ராகி மால்ட்
கேழ்வரகு மாவை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். அரை கப் பாலில் கேழ்வரகு மாவை கலந்து தனியாக வைக்கவும். 

மீதியுள்ள பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்கும் போது, கலந்து வைத்த கேழ்வரகு மாவை ஊற்றவும். 
நன்கு கலக்க வேண்டும். விடாமல் தொடர்ந்து கலக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றவும். இறுதியாக ஏலத்தூள், நட்ஸ் பவுடர் சேர்த்து கலக்கவும். சுவையான, சத்தான நட்ஸ் ராகி மால்ட் ரெடி.