பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் !

பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் !

0
நமது உடலுக்கு பலவித ஊட்டச் சத்துக்கள் அன்றாடம் தேவைப் படுகிறது. அதில் மிக முக்கியமானது இந்த பொட்டாசியம். 
பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்
மன அழுத்தத்திற்கும், சீரற்ற ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்க கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்து கொள்ளவும் பொட்டாசியம் உதவுகிறது. 
பொட்டாசியம் சத்து நமது உடலில் பல விந்தைகளை செய்கின்றது. இந்த ஒரு ஊட்டசத்து உங்கள் உடலில் செய்யும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..? நமது உடலில் நோய்களின் தாக்கம் இல்லாமலும் இவை பார்த்து கொள்கிறது. 

நமது உடலில் பல மாற்றங்களை இந்த பொட்டாசியம் சத்து தருகின்றது. பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால் ஏராளமான உடல் கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றான உண்டாகும். 

பொட்டாசியம் நிறைந்த காய்கனிகளை சாப்பிட்டால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

முக்கிய சத்து..!

மற்ற ஊட்டச் சத்துக்களை போன்றே இந்த பொட்டாசியம் நமது உடலுக்கு மிக முக்கியமாக தேவைப் படுகிறது. 
முக்கிய சத்து
இதய கோளாறுகள் முதல் சிறுநீரக பிரச்சினை வரை அனைத்தையும் பொட்டாசியம் சத்தால் குணப்படுத்த முடியும். இவை அனைத்தும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளி னால் தான் சாத்தியமாகும்.

உருளைக்கிழங்கு

பொட்டட்டோ சிப்ஸ், பொட்டட்டோ ப்ரைஸ்... போன்ற உருளைக் கிழங்கு சார்ந்த உணவு பொருளுக்கு நாம் மிக பெரிய அடிமையாக இருக்கின்றோம். 
உருளைக்கிழங்கு
ஆனால், உருளை கிழங்கை இப்படி சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.
ஏனெனில், இதிலுள்ள பொட்டாசியம் அப்போது தான் அப்படியே நமக்கு கிடைக்கும். அத்துடன் இரும்பு சத்து, வைட்டமின் பி6, சி, நார்சத்து போன்றவையும் சேர்ந்து கிடைக்கும்.

பீட்ரூட் 

170 கிராம் பீட்ரூட்டில் 518 mg அளவு பொட்டாசியம் உள்ளதாம். இந்த அடர் சிவப்பு நிறத்தில் உள்ள பழம் இதய நோய்கள் வரும் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
பீட்ரூட்
இதற்கு முழு காரணமும் பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் தான். மேலும், இதில் உள்ள இரும்புசத்து, மாக்னீஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை சீரான ரத்த ஓட்டத்தை தரும்.

முளைக்கீரை

பலவித மருத்துவ பயன்கள் இந்த முளைக் கீரையில் உள்ளதாம். முளைக் கீரையை சாப்பிடுவதால் பொட்டாசியம், வைட்டமின் கே, கால்சியம், மாக்னெஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.
முளைக்கீரை
எனவே, உங்களுக்கு பார்வை குறைபாடு, எலும்புகள் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைபாடு.. இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வராதாம்.

வாழைப்பழம்

பொட்டாசியம் என்றதுமே வாழைப்பழம் என்று தான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும். 1 வாழைப்பழத்தில் 422 mg பொட்டாசியம் சத்து உள்ளதாம்.
வாழைப்பழம்
எனவே, தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதோடு முழு ஆரோக்கி யத்தையும் தரும்.
தக்காளி 

இந்தியர்களின் உணவில் தக்காளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சாப்பிட்டு தக்காளியை ஒதுக்காமல் சாப்பிட்டாலே நமக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும்.
தக்காளி
குறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி, புரதசத்து ஆகியவை உடலுக்கு அதிக அளவில் செல்லும்.

ஆரஞ்சு

வைட்டமின் சி ஆரஞ்சில் அதிகம் உள்ளது என்பது நமக்கு நன்கு தெரியும். அத்துடன் இதில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதாம்.
ஆரஞ்சு
தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன் பலவித ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.

அவகேடோ

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மை யானது இந்த அவகேடோ. நார்சத்து, பலவித வைட்டமின்கள், பொட்டாசியம் போன்றவை இதில் நிறைந்துள்ளதாம்.
அவகேடோ
இந்த பழத்தை ஜுஸ் அல்லது சாலட் போன்று தயாரித்து சாப்பிடலாம்.

கிட்னி பீன்ஸ்

நார்ச்சத்தும் பொட்டாசியமும் அதிகம் நிறைந்துள்ள உணவுகளில் கிட்னி பீன்ஸ் முதன்மையான இடத்தில் உள்ளது.
கிட்னி பீன்ஸ்
அத்துடன் வெள்ளை பீன்ஸ், சோயா பீன்ஸ் போனற வற்றிலும் இதே போன்று பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே, இந்த பீன்ஸ்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது.
உலர் பழங்கள்

உலர்ந்த அத்திப்பழம், ஆப்ரிகாட், பீச் ஆகிய வற்றை தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உலர் பழங்கள்
மேலும், அதிக பொட்டாசியம் உடலுக்கு கிடைத்தால் பலவித நோய்களில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்.

யோகர்ட்

கால்சியம், ரிபோபிளவின்ஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச் சத்துக்கள் யோகார்டில் அதில் உள்ளது. உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும்,
யோகர்ட்
அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. எனவே அன்றாடம் சிறிது யோகர்ட் கலந்து சாப்பிட்டு வாருங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)