ஸ்நாக்ஸ் மேத்தி முத்தியா செய்வது எப்படி?





ஸ்நாக்ஸ் மேத்தி முத்தியா செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள் : 

வெந்தயக்கீரை - 2 கட்டு, 

பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், 

இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், 

பூண்டு விழுது - 2 டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 

சர்க்கரை - 1½ டீஸ்பூன், 

தயிர் - 2 டேபிள் ஸ்பூன், 

கோதுமை மாவு - 1 கப், 

கடலை மாவு - 1/2 கப், 

சீரகம் - 1 டீஸ்பூன், 

எள் - 1 டீஸ்பூன், உப்பு, 

பொரிக்க எண்ணெய் - தேவைக்கு. 

செய்முறை : 
ஸ்நாக்ஸ் மேத்தி முத்தியா

வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை போட்டு அதனுடன் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத் தூள், 
மஞ்சள் தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டை களாக உருட்டி வைக்கவும். 

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த வைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான மேத்தி முத்தியா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)