தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்பு – 100 கிராம்

பாதாம் பருப்பு – 100 கிராம்

பேரிச்சம் பழம் – 100 கிராம்

வெல்லம் – 200 கிராம்

ஏலக்காய் – 5

திராட்சைப் பழம் – 15

பச்சைக் கற்பூரம் – சிறிது

உப்பு – சிறிது

பால் – 1/2 லிட்டர்

நெய் – சிறிது

கிராம்பு – 2

செய்முறை:
பருப்பு பழ பாயசம்
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையம் சிறிது வெது வெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். 

பின்பு அவற்றின் தோலை எடுத்து விட்டு பேரிச்சம் பழத்தை கொட்டை எடுத்தது அதனுடன் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து பாலுடன் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். 

பின்பு அதன்மேல் வெல்லத்தைப் போட்டுக் கலக்கவும். நன்கு கொதித்ததும் நெய்யில் திராட்சையைப் பொரித்துப் போடவும். 

சிறிது உப்பு சேர்க்கவும். பச்சைக் கற்பூரத்தையும், கிராம்பு, ஏலக்காய், சிறிது சீனி சேர்த்துப் பொடித்துப் போடவும்.