நமது இந்திய மாசாலா பொருட்களில் இடம் பெற்றுள்ள ஏலாக்காயில் பல சத்துக்கள் உள்ளன. ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
இதனால், ஏலக்காய் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அதனால், ஏலக்காயை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
ஏலக்காயை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை பல வழிகளில் சாப்பிடலாம். ஏலக்காயை வாய் துர்நாற்றத்தைப் போக்க நேரடியாக அப்படியே சாப்பிடலாம்.
அதைவிட முக்கியமானது, தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இப்படி தினமும் 3 ஏலக்காயை சாப்பிட்டால், நல்ல உறக்கம் வரும்.
குறட்டை பிரச்னை தீரும்.. இயற்கையாக தூங்க, தினமும் இரவில் தூங்கும் முன் குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள்.
இதனால் நல்ல உறக்கம் வருவதுடன் குறட்டை பிரச்சனையும் நீங்கும். இது தவிர, கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏலக்காய் மூலம் போக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – இரண்டு டம்ளர்
தண்ணீர் – இரண்டு டம்ளர்
ஏலக்காய் – நான்கு
சர்க்கரை – எட்டு தேக்கரண்டி
டீ தூள் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை :
பால், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஏலக்காயை ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்டி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க விட வேண்டும்.
பிறகு டீ தூள் போட்டு இறங்கியதும் அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வடி கட்டவும். சூடான மாலை நேரம் பிஸ்கேட், சுண்டலுடன் குடிக்கவும்.
குறிப்பு :
இஸ்லாமிய இல்ல விசேஷங்களில் ஏலக்காய் டீ (அ) இஞ்சி டீ கண்டிப்பாக போடுவார்கள். ஒரு டிபன் அதுவும் சேமியா பிரியாணி, கறி தக்குடி என்றால் இந்த டீ இல்லாமல் இருக்காது.
வெறும் பால் குடிக்க பிடிக்காதவர்கள் ஏலக்காய் பால் கூட காய்ச்சி குடிக்கலாம். ரொம்ப ஜோராக இருக்கும்,
கெஸ்ட் வந்தாலும் ஒரு வித்தியாச மாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ என்று வித விதமாக போட்டு கொடுக்கலாம். சர்க்கரை கம்மியாக குடிப்பவர்கள் ஒன்றரை தேக்கரண்டி யாக குறைத்து கொள்ளலாம்