டேஸ்டியான சிக்கன் கருவேப்பிலை ப்ரை செய்வது எப்படி?





டேஸ்டியான சிக்கன் கருவேப்பிலை ப்ரை செய்வது எப்படி?

0
கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு மற்றும் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. 
டேஸ்டியான சிக்கன் கருவேப்பிலை ப்ரை செய்வது எப்படி?
இந்த கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் இருக்கிறது. அதே நேரத்தில் போலிக் ஆசிட் இருக்கிறது. இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். 

முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.  

கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைந்து விடும் என்று ஓரிரு நாட்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டு விட்டு சர்க்கரை வியாதி குறையவில்லை என்று கூறுவது சரியான விஷயம் கிடையாது. 
கறிவேப்பிலையில் உள்ள பலவிதமான நன்மைகள், சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இது செய்ய சில காலங்கள் எடுக்கும். 

சிறுவயதில் இருந்தே இது போன்ற இயற்கையான விஷயங்களை நாம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் போன்ற பிரச்சினைகள் நமக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. 

சரி இனி கருவேப்பிலை பயன்படுத்தி டேஸ்டியான சிக்கன் கருவேப்பிலை ப்ரை செய்வது எப்படி?  என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருள்கள் :

சிக்கன் - அரை கிலோ

கருவேப்பிலை -2 கொத்து

வர மிளகாய் – 5.

மிளகு -1 ஸ்பூன்

கடலை பருப்பு -1 ஸ்பூன்

இஞ்சி - சிறிது அளவு.

பூண்டு – சிறிது அளவு.

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

கொத்த மல்லி தூள் -1 ஸ்பூன்.
வலுவான எலும்புகளுக்கு! இதெல்லாம் க்காம சாப்பிடுங்க !
செய்முறை :
டேஸ்டியான சிக்கன் கருவேப்பிலை ப்ரை செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு வரமிளகாய், மிளகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.

வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கலவையில் கொத்த மல்லி தூள், சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

(விரும்பினால் பொரிக்கும் போது சிறிது அளவு கருவேப்பிலை போட்டு பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும் ).
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)