வெயில் காலத்திற்கு குளுமையான மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி?





வெயில் காலத்திற்கு குளுமையான மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி?

0
வெயில்காலத்தை மாம்பழ சீஸன் என்றும் அழைக்கிறோம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர் வெகுசிலரே. இந்தப் பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 
வெயில் காலத்திற்கு குளுமையான மாம்பழ குல்ஃபி
வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் மாம்பழத்தில் நிறைந்துள்ளதால் 

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக் கொள்ளலாம். 

மாம்பழத்தில் நார்ச்சத்து அதிமாக உள்ளதால் செரிமான கோளாறுகளை சரி செய்யும். செரிமான உறுப்புகளை சீராக இயக்கி மலச்சிக்கலை தடுக்கும். 

மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிமாக உள்ளதால் சருமத்திற்கு சிறந்த நண்பன் என்றும் சொல்லலாம். மாம்பழத்தை அரை மணி நேரம் முன்பு நீரில் ஊற வைத்து விட்டு உணவு சாப்பிடுவது சிறந்தது. 

காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் மாம்பழம் சாப்பிடுவதே செரிமானத்தைத் தூண்டும்.
தேவையான பொருட்கள்:

மாம்பழ விழுது (தோல் நீக்கி அரைத்தது) – 1 கப்

மாம்பழ துண்டுகள் – 1 கப்

பால்- 1 லிட்டர்

மில்க் மைட் – 100 மில்லி

சர்க்கரை – 150 கிராம்

துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி – 1/2 கப்

ஏலக்காய் துள் – சிறிய சிட்டிகை

பால்கோவா – 1/4 கப் (தேவைபட்டால் )

குங்குமப்பூ – சிறிய சிட்டிகை

சோளமாவு – சிறிதளவு

செய்முறை :
மாம்பழ குல்ஃபி செய்வது
சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

பால் பாதியாக சுண்டியதும் சக்கரையை சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து இதனுடன் மில்க் மைட் மற்றும் பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்..

நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும். 

பின் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்க்கவும்.

சிறிது நேரத்துக்கு பிறகு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கரைத்த சோளமாவை சேர்த்து கிளறவும். இறுதியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

இதை சற்று நேரம் ஆற வைத்து குல்ஃபி கோப்பைகளில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். குளுகுளு மாம்பழ குல்ஃபி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)