வெண்டைக்காய் கார குழம்பு செய்வது | Ladyfinger Spicy Gravy Recipe !

வெண்டைக்காய் கார குழம்பு செய்வது | Ladyfinger Spicy Gravy Recipe !

0
தேவையானவை :


வெண்டைக்காய் -250 கிராம்

பூண்டு -5 பற்கள்

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

புளி - 1 உருண்டை

வெங்காயம் - 10

தக்காளி - 1

நல்லெண்ணைய் - 3 ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை

அரைத்த தேங்காய் - 3 ஸ்பூன்

சீரகம், மிளகு - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :
வெண்டைக்காய் கார குழம்பு செய்வது

தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக் கொள்ளவும் தேங்காய், சீரகம், மிளகை நைசாக அரைக்கவும்
5 கோடி கீ.மீ பயணித்து செவ்வாய் கிரகம் சென்ற EXO MARS !
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , போட்டு தாளிக்கவும்

வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும். நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி, உப்பு வெண்டைக்காய் போட்டு நன்கு கிளரவும் நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.

பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைக்கவும். பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும் சுவையான வெண்டைக்காய் காரகுழம்புரெடி
ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் தெரியுமா?
குறிப்பு :

வெண்டைக்காய் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)