இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள்.. மரணம் கூட நேரலாம் !

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள்.. மரணம் கூட நேரலாம் !

0
மனித இனம் தோன்றுவ தற்கு முன்னரே தாவரங்கள் தோன்றி விட்டது. தாவரங்கள் இல்லை யென்றால் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு இங்கு வாய்ப்புகள் இல்லை. 
இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள்
ஏனெனில், இவை தான் மற்ற உயிர்களுக்கு முதல் நிலை நுகர்வோராக உள்ளது. தப்பி தவறி கூட இந்த செடிகளை தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால் மரணம் கூட நேரலாம்..! 
எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில தாவரங்கள் மிக கொடியதாக இங்குள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இவற்றில் ஒரு சில நாம் அன்றாடம் பார்க்கும் தாவரமாக கூட இருக்கலாம்.

விஷ தன்மையா..?

சில வகையான செடிகள் பார்ப்பதற்கு மிக கொடூரமாக இருக்கும். ஆனால், அவை நமக்கு தீங்கு தராது. சில தாவரங்கள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும். 
விஷ தன்மையா
ஆனால், இவைகள் கொடிய விஷ தன்மை வாய்ந்த தாவரங்களாக உள்ளவை. இவை நமது அருகில் உள்ள தோட்டங்களிலோ அல்லது வீடுகளிலோ கூட இருக்கலாம்.

ஷர்பகந்தா

மூலிகை தன்மை வாய்ந்த தாவரங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இவை பல வித பாதிப்புகளை மனிதனுக்கு தரவல்லது. 
ஷர்பகந்தா
முன்னாள் அமெரிக்க பிரசிடென்டி னான ஆபிரகாம் லின்க்கன் அவர்களின் தாயை இந்த மரத்தின் பால் தான் காவு வாங்கியது. இதிலிருந்து வெளியாகும் பால் அதிக விஷ தன்மை வாய்ந்தது.
ஊமத்தம் செடி

பார்ப்பதற்கு மிக சாதுவாக இருக்கும் இந்த செடி பயங்கர விஷ தன்மை மிக்கது. சாலை ஓரங்களில் இவை அதிக அளவில் காணப்படும். இதன் காய் மருத்துவ பயன் பாட்டிற்காக பயன்படுகிறது. 
ஊமத்தம் செடி
இதன் அருகில் செல்லும் போது இதன் தன்மையை மறந்து விடாதீர்கள். மறந்தும் இந்த செடியை உடலின் நோயிற்கோ அல்லது காயத்திற்கோ உபயோகிக்க வேண்டாம்.

ரத்தம் கக்கிய செடி

பார்ப்பதற்கு சற்றே கோரமாக ரத்தம் கக்கிய வடிவில் இந்த செடி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் 'Bleeding Tooth Fungus' என்று அழைப்பார்கள். 
ரத்தம் கக்கிய செடி
இவற்றை நீங்கள் தொட்டால் பிறகு உங்களுக்கு ரத்தம் கக்க தொடக்கி விடும். இந்த வகை செடிகளிடம் கட்டாயம் ஒரு அடி தள்ளியே நிற்க வேண்டும்.

ஆமணக்கு செடி

ஆமணக்கு எண்ணெய் பல பயன்களை மனிதனுக்கு தரவல்லது. ஆனால், இதன் விதையை அப்படியே சாப்பிட்டால் உடனடியாக உங்களின் உயிரை பறித்து விடும். 
ஆமணக்கு செடி
சாப்பிட்ட சில மணி நேரத்திலே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மரண படுக்கைக்கு சென்று விடுவீர்கள். இயற்கை யாகவே விஷ தன்மை கொண்ட செடியாக இது கருதப் படுகிறது.
சிவப்பு காளான்

எந்த ஒரு தாவரமும் கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தால் நிச்சயம் அதனிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வரிசையில் சிவப்பு காளானும் அடங்கும். 
சிவப்பு காளான்
ரம்மியமான செக்க சிவந்த தோற்றம் கொண்ட இந்த காளானை தொட்டாலோ அல்லது உணவாக சமைத்து சாப்பிட்டாலோ அவ்வளவு தான், உயிர் பிரிந்து விட கூடும்.

அரளி செடி

அரளி செடியின் பயங்கர தன்மையை பல படங்களிலும் வரலாற்று குறிப்புகளிலும் நாம் அறிந்திருப்போம். 
அரளி செடி
குறிப்பாக அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பிறந்தவுடன் கொல்வதற்கு இந்த செடியின் விதையை தான் பயன் படுத்தினர். மேலும், இதன் இலைகளிலும் விஷ தன்மை அதிகம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டெட்லி நைட்ஷெட் (Deadly Nightshade)

இந்த செடி பெயரிலே "சாவை" கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு மணத்தக்காளி செடியை போன்று தோற்றம் அளிக்கும். 
டெட்லி நைட்ஷெட் - Deadly Nightshade
மணத்தக்காளி செடி என்று நீங்கள் இதனை பயன் படுத்தினால் அவ்வளவு தான். சாப்பிட்ட உடனேயே மரணம் உங்களை அடைந்து விடும். 
குழ்ந்தைகளை விளையாடும் போது இது போன்ற செடிகளிடம் இருந்து பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள்.

குன்றிமணி கொடி

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கண்ணை வழங்கும் செடி தான் இது. இந்த செடியில் இருந்து வரும் பட்டாணி போன்ற விதைதான் விஷ தன்மை மிக்கது. 
குன்றிமணி கொடி
பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்து இருக்கும் இந்த விதைகளை குழந்தைகள் விழுங்கி விட்டால் அவ்வளவு தான்.

தேயிலை

நம்மில் பலருக்கு இந்த செடியின் குணம் நன்றாகவே தெரிந்திருக்கும். புகை இலை, மூக்கு பொடி, உட்கொள்ளும் பொடி என பல ரகங்களில் இதனை நாம் பயன்படுத்தி வருகின்றோம். 
தேயிலை
புற்றுநோயை தர கூடிய அனைத்து அம்சங்களும் இந்த செடியில் இருக்கிறது. இதனால் ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் பேர் இறக்கின்றனர் என ஒரு புள்ளி பட்டியல் சொல்கிறது.
ஜாக்கிரதை..!
எந்த வகை செடியாக இருந்தாலும் அதை கையாளும் போது அதன் தன்மையை உணர்ந்து கொண்டு தொடவோ அல்லது பயன்படுத்தவோ செய்யுங்கள். 
ஜாக்கிரதை
மேற்சொன்ன செடிகளின் மீது எப்போதும் ஒரு கவனம் இருத்தல் அவசியம். இந்த பதிவு பிடித்திருந்தால் பிறருடனும் பகிர்ந்து, அவர்களுக்கும் இந்த செடிகளின் விஷ தன்மையை தெரியப்படுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)