டேஸ்டியான சோம்பு - தனியா டீ செய்வது எப்படி?

டேஸ்டியான சோம்பு - தனியா டீ செய்வது எப்படி?

0
அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பொருள்களில் இதுவும் ஒன்று. இதனை பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்று வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். 
சோம்பு - தனியா டீ செய்வது
சாம்பார் தவிர்த்து புளிக் குழம்பு, அசைவ கிரேவிகள், கூட்டு, பொறியல்கள் என அனைத்து வகை சமையல்களிலும் இந்த பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளப் படுகிறது. 

உங்கள் மூச்சுக்காற்று கெட்ட மனம் கொண்டதாக இருக்கிறது என்றால் நம் உணவுக் குழாயில் பாக்டீரியாக்கள் குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

அந்த பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடும் பண்பு பெருஞ்சீரகத்திற்கு இருக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. 
ஆகவே, ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு விருந்தினர்களுக்கு பெருஞ்சீரகம் தரப்படுகிறது. சரி இனி சோம்பு, தனியா பயன்படுத்தி டேஸ்டியான சோம்பு - தனியா டீ செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையானவை . :

தனியா, சோம்பு - தலா 50 கிராம்

ஏலக்காய் - 1

கருப்பட்டி - 2 டீஸ்பூன்

புதினா - 1 கைப்பிடி

செய்முறை . :

தனியா, சோம்பை ஒன்றும் பாதியுமாக மிக்ஸியில் அரைக்கவும். இந்தப் பொடிதான் இந்த டீக்கு அடிப்படை. 2 டம்ளர் தண்ணீரில் அரைத்து வைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்க்கவும்.
கருப்பட்டி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு டம்ளராக மாறியதும் வடிகட்டி குடிக்கலாம். 

பலன்கள்
மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே நிறைந்துள்ளன. சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும். தாய்ப்பால் சுரக்க உதவும். பாலூட்டும் தாய் மார்களுக்கு மிகவும் நல்லது.

நீங்கள் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகளை அடிக்கடி எதிர் கொண்டால் சோம்பு தண்ணீர் அல்லது டீயை தினமும் குடிக்கலாம். 

இது இரைப்பை நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தடுக்கிறது. 

மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மலச்சிக்கல் அஜீரணம் உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சோம்பு தண்ணீர் குடிக்கலாம்.

சோம்பில் உள்ள பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் படபடப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

சோம்பு நீர் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? சோம்பில் உள்ள வைட்டமின் A கண்களுக்கு மிகவும் நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)