உலகில் உள்ள கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாக கருதப் படுகின்றது. சக்கரை நோயாளி களுக்கு மருந்துகளை விட ஆரோக்கிய உணவுகளே சிறந்தது என்று கூறப்படு கின்றது.
வேப்பம் பூ துவையல் செய்வது

அந்த வகையில் வேப்பம் பூ சர்க்கரை நோயாளி களுக்கு உகந்தது. இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

தேங்காய்த் துருவல் - அரை கப்

காய்ந்த மிளகாய் - 3

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

வேப்பம் பூ - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
ஆந்திராவில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்ட போலீசார் !
உளுந்தம் பருப்பு நன்றாக வறுபட்டதும் இதனுடன் தேங்காய்த் துருவல், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் ஆற வைக்கவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
பிரேக் இல்லாமல் ஓடும் பேருந்து - டயரின் கீழ் கல் வைத்து நிருத்தும் வசதி !
தற்போது வேப்பம் பூ துவையல் தயார். இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.