தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கைப்பிடி,

கலந்த காய்கறிகள் - 1/4 கப்,

இஞ்சிபூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம் - 1,

நறுக்கிய தக்காளி - 1,

கரம்ம சாலாத் தூள் - அரை டீஸ்பூன்,

புதினா, கொத்த மல்லித்தழை - சிறிது,

மிளகு தூள் - அரை தேக்கரண்டி,

தேங்காய்ப் பால் - 1/2 கப்,

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை :

காய்கறி களை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

குக்கரில் வெண்ணெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில் கரம்ம சாலாத்தூள், புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும். பின்பு நறுக்கிய காய்கறி களை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப் பால், மிளகு தூள் சேர்த்து பரிமாறவும். சத்தான ரைஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

குறிப்பு:
கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கலாம். பிரெட் துண்டுக ளுடன் பரிமாறவும்.