முருங்கை கீரை குழிப்பணியாரம் செய்வது | Drumstick Leaves Kulippaniyaram Recipe !

முருங்கை கீரை குழிப்பணியாரம் செய்வது | Drumstick Leaves Kulippaniyaram Recipe !

0
தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம். செய்து பாருங்கள் அப்புறம் பாருங்கள்.
முருங்கை கீரை குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - ஒரு கப்

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

முருங்கை கீரை - ஒரு கப்

வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு,

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கை கீரை, உப்பு போட்டு போட்டு வதக்கவும். கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. வதக்கிய கீரையை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான முருங்கை கீரை குழிப்பணியாரம் ரெடி. இந்தப் பணியாரத்து க்கு சாம்பார் தொட்டுச் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)