இந்தியாவின் ராஜஸ்தான் பக்கம் போனால் தான் குஜியா என்ற பலகாரத்தை நீங்கள் சாப்பிடலாம்.
தீபாவளி இனிப்பு.. அஞ்சீர் கட்லெட் செய்வது எப்படி?
கோதுமை மாவு, மைதா மாவு, சோயா உள்ளிட்டவற்றால் இதை செய்கின்றனர். 

இது அந்த மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது செய்யப்படும் பாரம்பரிய பலகாரமாகும். இந்த குஜியாவை ஒவ்வொரு ஊரிலும் வேறு பெயர் கொண்டும் அழைக்கின்றனர்.

தேவையான பொருட்கள்:

125 கிராம் மைதா மாவு

நிரப்புவதற்கு

30 கிராம் நெய்

75 கிராம் தூள் சர்க்கரை

75 கிராம் வறுத்த கோயா

75 கிராம் தேங்காய்

தேவையான அளவு பிஸ்தா

தேவையான அளவு பாதாம்

30 கிராம் சேமோலினா

தேவையான அளவு சிரோஞ்சி

தேவையான அளவு குங்குமப்பூ

தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்

மாவுக் கலவை

1/4 கப் நீர்

செயல்முறை: 

ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். 

அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்.

ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக் கொள்ளவும். 

அப்பறமா இந்த மாவில் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சு கொள்ளவும். 

மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விடவும். 

வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து கொள்ளவும்.

மாவை உருண்டைகளாக உருட்டிக் கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக் கொள்ளவும். 

இப்போ அதை குஜியா மேக்கர் ஸ்டாண்டில் போட்டு வீடியோவில் காட்டியிருக்குறத போல சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைத்து மூடி விடவும். 

குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும். அவ்வளவு தாங்க. சுவையான குஜியா சாப்பிடுவதற்கு தயார்.