கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி? | Corn Flower Halwa Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
விஷேசங்களின் போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா. சுவையான கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோள மாவு – அரை கப்

சர்க்கரை – ஒன்றை கப்

தண்ணீர் – இரண்டு கப்

ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

நெய் – மூன்று டீஸ்பூன்

முந்திரி – பத்து

செய்முறை :

கார்ன் ஃபிளவர் அல்வா

ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். 

பின்னர், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

ஜெல்லி பதம் வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன்

ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். 

இப்போது ருசியான கார்ன் ஃபிளவர் அல்வா தயார்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚