சுவையான சிவப்பு அரிசி பாயாசம் செய்வது எப்படி?

சுவையான சிவப்பு அரிசி பாயாசம் செய்வது எப்படி?

0
சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. 
சுவையான சிவப்பு அரிசி பாயாசம் செய்வது எப்படி?
புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படும் அரிசி என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். 

ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைப்பது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. 

எளிதாக ஜீரணமடையும் என்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது. வயிறு எளிதாக இருப்பது போல தோன்றும். 
பாயசம் என்றால் பிடிக்காதவர்கள் குறைவே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பாயாசத்தை சத்தான முறையில் சிவப்பரிசியில் பாயாசம் செய்வது எப்படி என காண்போம்.
தேவையானவை

சிவப்பு அரிசி - ½ கப்

தேங்காய் பால் - 1 கப்

ஏலப்பொடி - 1 சிட்டிகை

நெய் - 2 டீஸ்பூன்

நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கு ஏற்ப

செய்முறை
சுவையான சிவப்பு அரிசி பாயாசம் செய்வது எப்படி?
அரிசியை இரவு முழுவதும் ஊற விட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். 

வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும். 
வாணலில் நெய் விட்டு அரைத்த வற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப் படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும். சூடானதும் இறக்கி விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)