டேஸ்டியான பட்டாணி சாட் செய்வது எப்படி?

டேஸ்டியான பட்டாணி சாட் செய்வது எப்படி?

உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச் சத்துக்களும் ஒரே காய்கறியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கவலையே வேண்டாம். 
டேஸ்டியான பட்டாணி சாட் செய்வது எப்படி?
ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 46 சதவீதம், ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. வைட்டமின் கே எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. 

ஆனால் நாம் வைட்டமின் கே தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. 
புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது. 

வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபகச்தி அதிகரிக்கும்.

வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு  அதிகரிக்கும்.

உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

சரி இனி பட்டாணி கொண்டு சுவையான பட்டாணி சாட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) – 10,

காய்ந்த பட்டாணி – ஒரு கப்,

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),

சீரகம் – சிறிதளவு,

பச்சை மிளகாய் – 4,

கெட்டித் தயிர் – அரை கப்,

ஸ்வீட் சட்னி – ஒரு டீஸ்பூன்,

சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,

ஓமப்பொடி (ஸ்நாக் வகை) – கால் கப்,

கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு

பாரம்பரிய மிக்க பொங்கல் செய்ய சில டிபஸ் !

செய்முறை :.
டேஸ்டியான பட்டாணி சாட் செய்வது எப்படி?
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து… பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
Tags: