சுவையான காராமணி பழப்பச்சடி செய்வது எப்படி?

சுவையான காராமணி பழப்பச்சடி செய்வது எப்படி?

இந்த பயிரினை தனியே வேக வைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்று செய்தும் சாப்பிடலாம். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் சுடுவர்கள்.
சுவையான காராமணி பழப்பச்சடி செய்வது எப்படி?
காராமணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. 

பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன் காணப்படுகிறது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் அதிகமாக உள்ளன. 
சரி இனி காராமணி கொண்டு சுவையான காராமணி பழப்பச்சடி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:

காராமணி பயறு - 1 கப்

வெல்லம் பொடி செய்தது - 1 கப்

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

பப்பாளிப்பழம் நறுக்கியது - 1 கப்

மாதுளம் பழ முத்துக்கள் - 1 கப்

சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப்

ஆப்பிள் பழத்துண்டுகள் - 1/2 கப்

செய்முறை:
சுவையான காராமணி பழப்பச்சடி செய்வது எப்படி?
காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடக்கூடாது. 

சுண்டலுக்கு வேக வைப்பது போல் வேக வைத்து, தண்ணீரை வடித்து விடவும். ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத் தூளைப் போட்டு கொதிக்க விடவும். 
வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். 

பின்னர் அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து காராமணியும் வெல்லமும் ஒன்றாகச் சேரும் வரை கிளறி ஆற விடவும்.

ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தேனை ஊற்றி,  அத்துடன் வெல்ல காரா மணியையும் போட்டு நன்றாகக் கலந்து குளிர்பதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்திருந்து பரிமாறலாம்.
குறிப்பு:
பழக்கலவை யில் தங்களுக்கு விருப்பமான அனைத்துப் பழங்களையும் அல்லது அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை யும் சேர்க்கலாம். விருந்து போன்ற சமையங்களில் பரிமாற ஏற்றது.
Tags: