சுவையான பழக்கேசரி செய்வது எப்படி?





சுவையான பழக்கேசரி செய்வது எப்படி?

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. 
சுவையான பழக்கேசரி செய்வது எப்படி?
இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப் பார்க்காது.

கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

இந்த கேசரிக்கு, விருப்பமான, சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம். 
இதில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளிப்பழம், சப்போட்டா மற்றும் ஆரஞ்சு பழம் சேர்த்து சுவையான பழக்கேசரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: 

ரவா - 1 கப்

சர்க்கரை - 1 கப்

பழத்துண்டுகள் - 1 கப்

நெய் - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் வரை

முந்திரிப்பருப்பு - சிறிது

உலர்ந்த திராட்சை - சிறிது

ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !
செய்முறை:
சுவையான பழக்கேசரி செய்வது எப்படி?
பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் ரவாவிற்கு, ஒன்று முதல் ஒன்றரை கப் வரை பழத்துண்டுகளைச் சேர்க்கலாம்.
ஒரு வாணலி யில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனி யாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலி யில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டு களைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலி யில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, அதில் ரவாவைக் கொட்டி ஓரிரு நிமிட ங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.

அடி கனமான ஒரு பாத்தி ரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவாவைக் கொட்டிக் கிளறவும். 

ரவா வெந்த வுடன், சர்க்கரை யைச் சேர்த்துக் கிளறவும். சிறிது பாலிலோ அல்லது நீரிலோ கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும். 

பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண் டுகள், சிறிது நெய் ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறவும். 
கேசரி சற்று கெட்டியாகி, பாத்திர த்தில் ஒட்டாமல் வர ஆரம்பி த்ததும், அதில் வறுத்து வைத்துள்ள  முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய்த் தூள் ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கவனிக்க:

இனிப்பு சற்று கூடுத லாக வேண்டு மெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்க லாம்.
Tags: