சுவையான ரவை அல்வா செய்வது எப்படி?





சுவையான ரவை அல்வா செய்வது எப்படி?

0
ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் கரடு முரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். 
ரவை அல்வா செய்முறை
இதன் ஆங்கிலப் பெயர் செமொலினா (Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும்.

ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 

சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. 

ரவை கோதுமை யிலிருந்து தயாரிக்கப்படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. 
இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுஜி ஹா அல்வா அல்லது ரவை அல்வா என்பது பொதுவாக காலை உணவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாகும். இதை தயாரிக்க நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டாம். 

ரவை, பால், சர்க்கரை இருந்தாலே போதும். சுவையாக தயார் செய்து விடலாம். பொதுவாக இந்த உணவு கடவுள்களுக்கு வழங்கப்படுகிறது. 

மத மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இதை தவறாமல் செய்வார்கள். சரி வாங்க இதை எப்படி செய்யலாம் என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காண்போம்.

தேவையானவை :
பசும்பால் - 1 கப் 

பாலிஷ் செய்யாத சர்க்கரை - அரை கப் 

வறுத்த ரவை - ¼ கப் 

நெய் - 1 டீஸ்பூன் 

முந்திரி, பாதாம், உலர் திராட்சை - 2 ஸ்பூன் 

செய்முறை :

சிறிதளவு காய்ச்சிய பாலில் ரவை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்து அரைத்து கொள்ளவும். ஒரு கப் பால் நன்றாகக் கொதித்த வுடன் சர்க்கரை போட்டு நன்கு கலக்கவும். சர்க்கரை கரைந்து விட வேண்டும். 
அரைத்த ரவையைப் போட்டு கிளற வேண்டும். அல்வா பதம் வர வேண்டும். வந்ததும் நெய்யில் நட்ஸ், உலர் திராட்சை வதக்கி அல்வாவில் போட வேண்டும். சுவையான ரவை அல்வா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)