நீரிழிவு நோயை கட்டுப் படுத்துவதிலும், நரம்புகள் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ஓர் உணவுப் பொருளாகவும் கடலைப்பருப்பு உள்ளது. உடல் எடை பெருக்கவும், நல்ல செரிமானத்திற்கும் கடலை பருப்பு உதவுகிறது.
உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது.
உங்கள் தொப்புள் பற்றி அறிந்திராத தகவல் தெரிந்து கொள்ள?
மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
எனவே குழந்தைகள் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.
இப்படி ஏராளமான ஆரோக்கிய பயன்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கடலைப்பருப்பில் எப்படி சுவையான மற்றும் சத்தான சுண்டல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : .
கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
துணையின் போலியான அன்பை சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ள !
செய்முறை . :
குக்கரில் உள்ள விசில் போனதும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்து விட்டு, பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
இதன்பின்னர், ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, முன்னர் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். தொடர்ந்து துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !
பின்னர் கீழே இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி விட்டால், சுவையான மற்றும் சத்தான கடலைப்பருப்பு சுண்டல் தயார்.
இப்போது அவற்றை சூடாக பரிமாறி ருசிக்கலாம்.