அருமையான அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?





அருமையான அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?

இதில் அதிகப் படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும். 
அருமையான அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?
உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகி விடும். சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. 

பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. 

ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் தெரியுமா?

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். தினசரி சுமார் 2 அல்லது 3 உலர்ந்த அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 

இவற்றை நீங்கள் காலையில் உட்கொள்ளலாம். அத்திப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான பழம் சூப்பர் ஜூசி மற்றும் நிறைய முறுமுறுப்பான விதைகளைக் கொண்டுள்ளது. ஊற வைத்த அத்திப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 

நீங்கள் உலர்ந்த அத்திப் பழங்களை உண்ணலாம் என்றாலும், ஊற வைத்த அத்திப் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அத்திப் பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள் :

அத்திப்பழம் - 10

பேரிச்சம் பழம் - 30

பாதாம் தூள் - 3 மேசைக் கரண்டி

சீனி - ஒரு கப்

நெய் - 50 கிராம்

எண்ணெய் - கால் கப்

கார்ன் ஃப்ளார் - 3 மேசைக் கரண்டி

ஏலக்காய்த் தூள் - சிறிது

முந்திரி - 8

நல்ல மனைவிக்கு அடையாளம் என்னன்னு தெரியுமா? உங்களுக்கு !

செய்முறை:

அத்திப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பேரிச்சம் பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அத்திப்பழ அல்வா
கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். ஒரு நாண் - ஸ்டிக் கடாயில் சீனியைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

அத்துடன் நறுக்கிய அத்திப்பழம், பேரிச்சம் பழம், பாதாம் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கிளறி விட்டு சுருள வேக விடவும். 
அத்துடன் கால் கப் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி, நன்கு இடை விடாது கிளறவும். பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.
Tags: