மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது என்று ஒரு சித்த மருத்துவப் பழமொழியே உண்டு. அந்தஅளவுக்கு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது மந்தாரை.
உணவு சாப்பிடப் பயன்படும் இந்த இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடையது பெரிதாய் காணப்படுகிறது.
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப் பதியிலும் தலமரமாக விளங்கிறது.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன.
ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.
ரத்தக் கட்டிகளை குணமாக்கும்
வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக் கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.
மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக் கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது.
உடல்பலம் மிகுக்கும். முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியது மந்தாரை.
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
தைராய்டு நோய்க்கு தீர்வு
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு.
அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மனஅழுத்தம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும்.
கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்ற வற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.
மேலும் ரத்தமூலம், சிறுநீர்த் தாரையில் புண் போன்ற வற்றையும் நன்கு குணப்படுத்தும்.
சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும்.
மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால் வரும் பேதி நின்று உடல் நலம் பெறும்.
முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.
மேலும் வயிற்று போக்கு படுக்கையில் சிறுநீர் கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல், பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.