இது இறைச்சி அல்லது காய்கறிகள், மசாலா பொருட்களை உணவு அல்லது தண்ணீருடன் சேர்த்து சமைப்பதின் மூலம் தயாரிக்கப் படுகிறது.
ஒரு பானையில் தேவையான தண்ணீர் ஊற்றி, மசாலா பொருட்களைக் சேர்த்து திரவங்களில் சுவைகள் பிரித்தெடுக்கப்படும் வரை கொதிக்க வைக்கப்படும் போது ஒரு குழம்பு உருவாகின்றது. அதுவே சூப் என்று சொல்லப்படுகிறது.
நம்ம வீட்டுல இருக்கிறவங்க எல்லாருக்குமே வெஜிடபிள் சூப் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹோட்டலில் செய்யும் வெஜிடபிள் சூப்புக்கு சுவை அதிகம்.
நம்முடைய வீட்டில் சூப் வைத்தாலும், ஹோட்டலில் வைப்பது போல் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை என்று கட்டாயம் நம் குழந்தைகள் சொல்லுவார்கள்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் சூப் வைப்பது எப்படி? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து, பசியைத் தூண்டும் சூப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா?
தேவையானவை:
அதிக சிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம் ஆபத்தா?
தக்காளி நறுக்கியது - 4
வெள்ளரிக்காய் நறுக்கியது - 1 சிறிய
சிவப்பு குடைமிளகாய் நறுக்கியது - 1
வெங்காயம் நறுக்கியது - 1
தக்காளி சாறு - 3 கப்
இளசான மூலிகைகள் - 2 ஸ்பூன் (வேக்கோசு,தைமே, டாரகோன்)
சிவப்பு ஒயின் வினிகர் - ¼ கப்
பூண்டு துண்டு - 2 பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
டாபஸ்கோ சாஸ் - தேவையான அளவு
துளிசி இலை - தூவ
புகைத்து தள்ளும் கர்ப்பிணிப் பெண்களே !
செய்முறை:
ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் அளவு தக்காளி, வெள்ளரி, குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை தனித்தனியே அரைத்து பின்னர் தூவுவதற் காக எடுத்து வைக்கவும்.
மிக்சியில் மிச்சமுள்ள உட்பொருட்களை நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !
எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் டாபஸ்கோ சாஸ் சேர்த்துக் கொள்ளவும். டைட்டாக மூடி இரவு பிரிட்ஜில் வைக்கவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றவும். ஜில்லென, அரைத்த சூப்பின் மேல் காய்கறிகள் மற்றும் துளசி இலையின் மூலம் கார்னிஷ் செய்யவும்.