ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது | Making Olive capsicum Salad Recipe !

ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது | Making Olive capsicum Salad Recipe !

0
ஆலிவ், காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது. இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
ஆலிவ் குடைமிளகாய் சாலட்
தேவையான பொருட்கள் :

ஆலிவ் – 1/2 கப்

சிவப்பு குடை மிளகாய் – 1

பச்சை குடை மிளகாய் – 2

வெள்ளரிக்காய் – 1

எலுமிச்சை சாறு – 2 மேஜைக் கரண்டி

பூண்டு – 10 பல்

உப்பு – சுவைக்க

ஆலிவ் ஆயில் – சிறிதளவு

மிளகு – சுவைக்க

செய்முறை :

வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 
ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடை மிளகாயை வைத்து கொள்ளவும். அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும். அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும். 
அதன் மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும். பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும். அருமையான ஆலிவ் குடை மிளகாய் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)