கேப்பை தோசை செய்வது எப்படி? | How to make a Keppai Disa !





கேப்பை தோசை செய்வது எப்படி? | How to make a Keppai Disa !

0
தேவையானவை: 
கேப்பை (கேழ்வரகு) மாவு 250 கிராம், 

அரிசி மாவு 50 கிராம், 

உளுத்தம் பருப்பு 50 கிராம், 

பச்சை மிளகாய் 3, 

சீரகம் ஒரு டீஸ்பூன், 

வெங்காயம் ஒன்று (நறுக்கவும்), 

கொத்த மல்லித் தழை கால் கட்டு, 

எண்ணெய் 50 மில்லி, 

உப்பு தேவையான அளவு. 

செய்முறை: 
கேப்பை தோசை செய்வது எப்படி?

உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் கேப்பை மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்த மல்லித் தழை, வெங்காயம் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 

5 (அ) 6 மணி நேரத்துக்குப் பிறகு தோசை சுடவும். 5, 6 மணி நேரம் புளிக்க வைக்க முடியா விட்டால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கரைத்து உடனடியாக தோசை வார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)