பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது | Paneer Grill Sandwich Recipe !





பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது | Paneer Grill Sandwich Recipe !

0
தேவையான பொருட்கள் :

கோதுமை ரொட்டி (அ) நவதானிய ரொட்டி - 8, 

பன்னீர் துருவியது - 1 கப், 

கேரட் துருவியது - 2 டேபிள் ஸ்பூன், 

சீஸ் துருவியது - 2 டேபிள் ஸ்பூன், 

ஸ்வீட் கார்ன் ( வேக வைத்தது) - 2 டேபிள் ஸ்பூன், 

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், 

குடை மிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை பொடியாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன், 
மிளகு பொடி - 2 டேபிள் ஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு, 

கொத்த மல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு, 

கிரீன் சட்னி - 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை :
பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கேரட், சீஸ், வேக வைத்த ஸ்வீட கார்ன், நறுக்கிய கொத்த மல்லித் தழை, நறுக்கிய குடை மிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகிய வற்றை நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். 
இப்போது கோதுமை ரொட்டியில் முதலில் வெண்ணெய் தடவி, பின் அதன் மேல் புதினா சட்னியை தடவி, அதன் மேல் பன்னீர் கலவையை வைத்து, அதன் மேல் ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூட வேண்டும்.

சூடாக்கிய கிரில்பேன் அல்லது தோசைக் கல்லில் ரொட்டியை வைத்து இரண்டு பக்கமும் சிவந்த பிறகு, இரண்டாக வெட்டி பரிமாறவும். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)