பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ் செய்முறை | Papaya - Orange Juice Recipe !





பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ் செய்முறை | Papaya - Orange Juice Recipe !

0
பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் சேர்த்து மூன்று பழங்களிலும் சத்துக்கள் அதிகம் உள்ளன. 
பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்
இத்தகைய பப்பாளி ஆரஞ்சு வாழைப்பழம் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்க லாம்.

தேவையான பொருட்கள் :

பப்பாளி பழ துண்டுகள் – 1 கப்

ஆரஞ்சு – 1

வாழைப்பழம் – 3 துண்டு

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

உப்பு – சிட்டிகை

தேன்- தேவையான அளவு

மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை :

* ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை சாறு, பப்பாளி பழத்துண்டுகள், வாழைப்பழம்,
உப்பு, தேன், ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் இட்டு அடித்துக் கொள்ளவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி பருகலாம்.

* பப்பாளி ஆரஞ்சு ஜூஸ் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)