மியாவ் தோசை செய்முறை | Mauve Dosa Recipe !





மியாவ் தோசை செய்முறை | Mauve Dosa Recipe !

0
தேவையானவை: 

தோசை மாவு – ஒரு கப்

சாக்லேட் சிரப், நெய் – தேவையான அளவு

செர்ரிப் பழம் – 5 (இரண்டாக நறுக்கவும்).

செய்முறை:
மியாவ் தோசை

தோசைக் கல்லைக் காய வைத்துச் சிறிய குழிக்கரண்டி யால் மாவை எடுத்து, சிறிய வட்டமாக ஊற்றவும். 

அதன் கீழ்ப்புறம் சற்று பெரிய வட்டமாக ஊற்றவும்.

பிறகு, சிறிதளவு மாவை எடுத்து வால், காது போல படத்தில் காட்டி யுள்ளவாறு ஊற்றவும்.

சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு உடையாமல் கவனமாகத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

பிறகு, சிறிய வட்டத்தின் மீது சாக்லேட் சிரப்பால் கண் வரையவும். 

செர்ரி துண்டை வாய் போல அலங்கரித்துப் பரிமாறவும்.

இதை குட்டீஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இரும்புச் சத்தும் கொண்டது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)