ஸ்வீட் கார்ன் தேங்காய் உருண்டை செய்வது எப்படி? | Sweet Corn Coconut Powder Recipe !

0
தேவையானவை:

கொர கொரப்பாக அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது – ஒரு கப்,

வேக வைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, 

சீரகம் – அரை டீஸ்பூன்,

மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு, 

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன், 

துருவிய தேங்காய் – கால் கப், 

எண்ணெய் – 200 கிராம், 

சோள மாவு கரைசல் – சிறிதளவு 

(சோள மாவை சிறிது உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்).

செய்முறை:
ஸ்வீட் கார்ன் தேங்காய் உருண்டை

ஸ்வீட் கார்ன் விழுது, வேக வைத்த பச்சைப் பட்டாணி, சீரகம், மிளகுத் தூள், உப்பு, 

இஞ்சி – பூண்டு விழுது, துருவிய தேங்காய் ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். 

இந்த உருண்டையை சோள மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)