வெண்ணெய் சாதம் செய்வது எப்படி? | Ghee Rice recipe !





வெண்ணெய் சாதம் செய்வது எப்படி? | Ghee Rice recipe !

0
தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்

வெங்காயம் - ஒன்று

பிரிஞ்சு இலை - ஒரு துண்டு

மல்லித் தளை - சிறிது

வெண்ணெய் - 4 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - 3 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று
சாமை கோழி பிரியாணி செய்முறை !
செய்முறை :
நெய் சாதம் செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும். 

மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி, அதில் கிராம்பு, பட்டை , ஏலக்காய், அன்னாசிப் பூவை தாளிக்கவும்.
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி செய்முறை !
தாளித்த வற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். 

பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும். அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். 

அதனுடன் தாளித்த வற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும். கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து கிளறி விடவும். 
பிறகு மூடி போட்டு மீண்டும் வேக விடவும். குக்கர் ஆவி வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும். நெய் சதாம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)