ஸ்வீட் பால்ஸ் செய்முறை / Sweet Ballz Recipe !





ஸ்வீட் பால்ஸ் செய்முறை / Sweet Ballz Recipe !

0
தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்,

வெள்ளை ரவை - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை,

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங்குக்கு:
துருவிய தேங்காய் - ஒரு கப்,

பொடித்த சர்க்கரை - அரை கப்,

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை,

டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள் ஸ்பூன், 

உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன், 

உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:
ஸ்வீட் பால்ஸ்
மைதா, ரவை, உப்பு, வெண்ணெய் ஆகிய வற்றை சேர்த்து, நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 20 நிமிடம் ஊற விடவும்.

துருவிய தேங்காயை வெறும் வாணலியில் வறுத்து சர்க்கரை, ஏலக்காய்த் தூள், டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி, திராட்சை சேர்த்து, 

தேங்காய் சூட்டிலேயே எலுமிச்சை அளவு (அ) பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைக ளாக உருட்டி வைக்கவும்.
பிசைந்த மைதா மாவினை சிறிய உருண்டைக ளாக எடுத்து, சிறிய சப்பாத்திக ளாக இட்டு, 

இனிப்பு உருண்டையை அதில் வைத்து, பிரிந்து விடாதவாறு மூடவும்.

கடாயில் எண்ணெயைக் காய வைத்து (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்), செய்து வைத்த உருண்டை களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)