வரகு அரிசி அதிரசம் செய்முறை / Millet Rice Desserts Recipe !





வரகு அரிசி அதிரசம் செய்முறை / Millet Rice Desserts Recipe !

0
தேவையானவை: 

வரகு அரிசி - ஒரு கிலோ, 

நாட்டு வெல்லம் - முக்கால் கிலோ, 

எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை:
வரகு அரிசி அதிரசம்
வரகு அரிசியை தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடை யால் சலித்துக் கொள்ளவும். 

நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். 

(வெல்லப் பாகினை பாத்திரத்தில் விட்டால் நகராத அளவுக்கு கெட்டி பதம்). 
வெல்லப் பாகினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வரகு அரிசி மாவினை சேர்த்துச் சற்று கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். 

(தட்டி எண்ணெயில் போடும் அளவுக்கு) இந்த மாவை சிறு உருண்டை யாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரிக்கவும். 

அதிரசம் பொன்னிற மாக வந்ததும் எடுத்து விடவும். 

பலன்கள்: 

எளிதில் செரிமானம் ஆகும். மாவுச் சத்துக் குறைவாக இருப்பதால், அதிக எடை இருப்பவர் களும் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)