தேவையானவை:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு – அரை கிலோ,

தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்),

பொடித்த வெல்லம் – 150 கிராம்,

முந்திரிப் பொடி – 2 டீஸ்பூன்,

மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உருண்டை
தேங்காய் துரு வலை சிவக்க வதக்கவும். சக்கரை வள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் வேக விட்டு துருவிக் கொள்ளவும்.

இத்துடன் பொடித்த வெல்லம், முந்திரிப்  பொடி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து உருட்டி, 

வதக்கிய தேங்காய் துருவலில் புரட்டி வைக்கவும். விருப்பப் பட்டால் ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம்.