வாழைத்தண்டு முள்ளங்கி சாம்பார் செய்முறை / Banana Mushroom Sambar Recipe !

0
தேவையானவை:

வாழைத்தண்டு – ஒரு துண்டு,

துவரம் பருப்பு – 50 கிராம்,

முள்ளங்கி – 2,

சின்ன வெங் காயம் – 4,

மஞ்சள் தூள்- சிறிதளவு,

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,

புளி – நெல்லிக்காய் அளவு,

நறுக்கிய கொத்த மல்லித் தழை – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவைக் கேற்ப.

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – ஒன்று,

தனியா – 3 டீஸ்பூன்,

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,

துருவிய தேங்காய் – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
வாழைத்தண்டு முள்ளங்கி சாம்பார்
துவரம் பருப்பை குழைய வேக விடவும். புளியைக் கரைத்து… உப்பு, மஞ்சள் தூள், சாம் பார் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். 

வாழைத் தண்டை நார் நீக்கி வில்லை களாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும்.

பாதி வெந்ததும், நறுக்கிய முள்ளங்கியை யும், சின்ன வெங்காயத் தையும் வதக்கி சேர்க்கவும்.
காய்கள் வெந்ததும், வெந்த துவரம் பருப்பை சேர்த்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத் துள்ளவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்த்து… கொதி வந்ததும் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள வற்றைத் தாளித்துக் கொட்டி, கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)