வேர்க்கடலை தேங்காய் எள் பொடி செய்முறை !

வேர்க்கடலை தேங்காய் எள் பொடி செய்முறை !

0
தேவையானவை:

வறுத்து, தோல் உரித்த வேர்க்கடலை – ஒரு கப், 

துரு விய தேங்காய் – கால் கப், 

வறுத்த எள் – 4 டீஸ்பூன், 

முந்திரிப் பருப்பு – 5, 

காய்ந்த மிளகாய் – 2, 

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, 

எண்ணெய் – 2 டீஸ்பூன், 

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
வேர்க்கடலை தேங்காய் எள் பொடி
வாணலியில் எண் ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை வறுக்கவும். 

தேங்காயை வறுத்து இதனுடன் சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 

பின்னர், வேர்க்கடலை, எள் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும்.

முந்திரியை வறுத்து துண்டுக ளாக்கி சேர்த்து… நன்றாக கலந்து விடவும். 

இந்தப் பொடியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

உதிர் உதிராக வடித்த சாதத்துடன் தேவையான பொடி சேர்த்து, 

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

குறிப்பு:

உடல் இளைத்தவர்கள் இந்தப் பொடியைத் தினசரி பயன் படுத்தினால், உடல் பருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)