கேழ்வரகு - காய்கறி உப்புமா செய்வது எப்படி?

கேழ்வரகு - காய்கறி உப்புமா செய்வது எப்படி?

உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். 
கேழ்வரகு – காய்கறி உப்புமா
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது.

பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும்கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி. 
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை! என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின் போது கைகொடுத்து உதவுவது. 

வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா.

தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்

கேரட் – 50 கிராம்

பீன்ஸ் – 50 கிராம்

உருளைகிழங்கு – 50 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

தாளிக்க :

கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய்.
உடல் நோய்களைக் வெளிக்காட்டும் நகங்கள் !
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்த மல்லி, உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை 

ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும்.

சத்தான கேழ்வரகு – காய்கறி உப்புமா ரெடி.
கடலில் குதித்து நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க வீரர் !
குறிப்பு :

ராகியில் உள்ள நார்ச்சத்து அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. எனவே செரிமான வேகத்தை பராமரிக்கவும் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இது உதவுகிறது. 
ராகி மாவு, கேழ்வரகு மாவு என்றும் அழைக்கப்படுகிறது. இது பழுப்பு-சிவப்பு நிறத்தில் இருக்கும். கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. 

ஆரோக்கியமான உணவு ஆகும். இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. 

இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது.
Tags: