பாசிப்பருப்பு அசோகா செய்முறை / Pacipparuppu Ashoka Recipe !





பாசிப்பருப்பு அசோகா செய்முறை / Pacipparuppu Ashoka Recipe !

0
தேவையானவை:

பாசிப்பருப்பு – 200 கிராம்,

சர்க்கரை – 500 கிராம்,

வறுத்த கோதுமை மாவு – ஒரு கப்,

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை,

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,

நெய் – 100 மில்லி.

செய்முறை:
பாசிப்பருப்பு அசோகா

பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். 

சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும்.

கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும்.

சிறிது சிறிதாக நெய் விட்டு மேலும் கிளறி… குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)