ரோஜா(க்) செய்முறை | Rose (foot) Recipe !





ரோஜா(க்) செய்முறை | Rose (foot) Recipe !

0
தேவையானவை:

மைதா மாவு – ஒன்றரை கப்,

அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,

கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன்,

பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்,

ஈஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்,

சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்,

தண்ணீர் – ஒரு கப்,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

தேங்காய்த்துருவல் – ஒரு கப்,

பெரிய வெங்காயம் – ஒன்று,

காய்ந்த மிளகாய் – 2,

கறிவேப்பிலை – ஒரு கொத்து,

ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கொத்து,

டோஃபு – ஒரு விரல் அளவு துண்டுகள் – 3,

பீநட் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – பொரிக்க,

உப்பு – அரை டீஸ்பூன். (தனியாக கொஞ்சம் மைதா மாவு வைத்துக் கொள்ளவும்)

செய்முறை:
ரோஜா(க்) செய்முறை
வெது வெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலக்கி 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். 

மூன்று மாவுகளை யும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, அதில் இந்தத் தண்ணீரைச் சேர்த்து மரக்கரண்டி யால் மாவை நன்கு கலக்கி, 

3 மணி நேரம் மூடி வைக்கவும் (மாவு மூன்று மடங்காக உப்பி வரும் என்பதால் உயரமான பாத்திரத்தில் வைக்கவும்).

உப்பிய மாவை நன்கு கலக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு ஒரு கோப்பையிலும், மீதி மாவை சரி பாதியாக இரண்டு பாத்திரங்களிலும் எடுத்து வைக்கவும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் மாவில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கலக்கி அதில் டோஃபு துண்டுகளைப் புரட்டி வைக்கவும்.

ஒரு பாதி மாவில் தேங்காய்த் துருவல், இரண்டு டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.

மற்றொரு பாதி மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், மஞ்சள்தூள், 

மைதா மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும் (இது உருண்டை பிடிக்கும் அளவு இருக்காது.

தளர்வாக உளுந்த வடை மாவை கையில் எடுத்து சிறுசிறு உருண்டை யாகப் போடும் பதத்தில் வரும்).

வாணலியில் எண் ணெய் சூடானதும் டோஃபு துண்டுகளைப் பொன்னிற மாகப் பொரித் தெடுக்கவும். 

அடுத்து தேங்காய்த் துருவல் கலந்த கலவையை ஒவ்வோர் உருண்டையாகச் சேர்த்து பொரித்து எடுக்க வும்.

அதேபோல அடுத்த காரக் கலவையையும் எண்ணெயில் பொரித் தெடுக்கவும். 

பொரித்த வற்றை இரு துண்டுகளாக நறுக்கி தட்டில் பரப்பி, வெள்ளரித் துண்டுகளைச் சுற்றிலும் வைத்து, 

நறுக்கிய காய்ந்த மிளகாய்தூவி, பீநட் சாஸுடன் பரிமாறுவது உணவகங்களில் வழக்கம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)