ஜில் ஜில் ஜிகிர்தண்டா செய்முறை | Jil Jil Jigardanda Recipe !





ஜில் ஜில் ஜிகிர்தண்டா செய்முறை | Jil Jil Jigardanda Recipe !

0
தேவையான பொருட்கள் :

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்

சைனா கிராஸ் (China Grass) – 4 டேபிள் ஸ்பூன்

ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்

நன்னாரி சிரப் – 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1

பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
ஜில் ஜில் ஜிகிர்தண்டா - Jigardanda
* அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.

பால் அரை லிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதி விட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 

2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.

* அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.

* அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.

* ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)