பைனாப்பிள் டார்ட் செய்முறை | Pinapple tart Recipe !





பைனாப்பிள் டார்ட் செய்முறை | Pinapple tart Recipe !

0
தேவையானவை: 

ஜாம் செய்ய: 

பைனாப்பிள் – ஒன்று, 

சர்க்கரை – 1/3 கப், 

உப்பு – 2 சிட்டிகை, 

பட்டை – அரை இன்ச், 

கிராம்பு – 2. பிஸ்கெட் 

மாவுக்கு: 

மைதா மாவு – 200 கிராம், 

வெனிலா கஸ்டர்ட் பவுடர் (அ) கார்ன் ஃப்ளார் பவுடர் – 50 கிராம், 

மார்ஜரின் (அ) வெண்ணெய் – 120 கிராம், 

பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன், 

முட்டை – ஒன்று, 

உப்பு – 2 சிட்டிகை.

செய்முறை:
பைனாப்பிள் டார்ட் செய்முறை
பைனாப்பிளை தோல் சீவி துண்டுக ளாக்கி மிக்ஸியில் அரைக்கவும். 

அகலமான பாத்திரத்தில் அதைக் கொட்டி, அத்துடன் சர்க்கரை, உப்பு, பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 

சர்க்கரை கரைந்து தண்ணீர் விட்டு, பின் சுருண்டு வரும் வரை இடையிடையே கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டியானதும் ஜாமை ஆற விடவும். 

ஒரு பாத்திரத்தில் மாவுகளை எடுத்து உப்பு, பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் மார்ஜரின் சேர்த்து நன்கு கலக்கவும். 

முட்டையை ஒரு கோப்பையில் உடைத்து ஊற்றி அடிக்காமல் முள் கரண்டியால் லேசாகக் கலந்து விட்டு 

அதில் ஒரு மேசைக் கரண்டி அளவு வைத்து கொண்டு, மீதியை மாவில் ஊற்றி மாவை நன்கு பிசையவும். 

தேவை யெனில் ஒன்றிரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கெட்டியாகப் பிசைந்து, 

இரண்டாகப் பிரித்து உருண்டை யாக்கி, காற்று படாமல் அரை மணி நேரம் மூடி வைக்கவும். 

ஆறிய ஜாமிலிருந்து பட்டை, கிராம்பை நீக்கி விட்டு சிறு ஸ்பூன் அளவு எடுத்து உருண்டை போன்று செய்து வைக்கவும். 

அகன்ற சமமான தட்டில், மாவின் ஒரு பகுதியை மட்டும் வெளியில் எடுத்து, மேலே ஒரு பாலிதீன் பையை வைத்து, 

அடர்த்தி யாக உருட்டைக் கட்டையால் வார்த்து, குக்கி கட்டர் அல்லது 

ஏதேனும் மூடியால் வட்ட வடிவில் வெட்டி, நடுவே கொஞ்சம் குழியாக இருக்கும்படி செய்து, 

அதில் ஜாம் உருண்டையை வைத்து, மேலே கொஞ்சம் மாவை மெல்லியதாய் வார்த்து, தீக்குச்சி அளவில் கீறி படத்தில் உள்ளவாறு வைத்து, 

ஒரு பிரஷ்ஷால் முட்டையை தொட்டு லேசாக மேலே தடவி, பேக்கிங் தட்டில் வைக்கவும். 

இதே போல் எல்லா வற்றையும் செய்து, அவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். 

ஆறிய பின் ஒரு டப்பாவில் சேமித்து வைத்து, இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை வைத்துச் சுவைக் கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)