நாசி கொரிங் செய்முறை | Nossy Corning Recipe !





நாசி கொரிங் செய்முறை | Nossy Corning Recipe !

0
தேவையானவை: 

பாஸ்மதி அரிசி சாதம் – ஒரு கப், 

பெரிய வெங்காயம் – ஒன்று, 

காய்ந்த மிளகாய் – 2, 

வெங்காயத் தாள் – ஒன்று, 

சில்லி பேஸ்ட் – 1 டீஸ்பூன், 

சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், 

பூண்டு – 2 பல், 

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், 

முட்டை – ஒன்று (விரும்பினால்), 

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
நாசி கொரிங் செய்முறை

தோல் உரித்த பூண்டு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், வெங்காயத் தாளைப் பொடியாக நறுக்கவும். 

அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

பின் சில்லி பேஸ்ட், சோயா சாஸ் சேர்த்துப் பிரட்டி, முட்டை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 

பிறகு வேக வைத்த சாதம், மிளகுத் தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவி கிளறி இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)