குயே பஹ்லு செய்முறை | Guye Bahloo Recipe !





குயே பஹ்லு செய்முறை | Guye Bahloo Recipe !

0
தேவையானவை: 

மைதா மாவு – 100 கிராம், 

சர்க்கரை – 80 கிராம், 

முட்டை-3 (மாற்றாக, 1 டீஸ்பூன் வினிகரும் அரை டின் கன்டென்ஸ்டு மில்க்கும் சேர்க்கலாம்), 

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், 

வெனிலா எசன்ஸ்/ரோஸ் எஸன்ஸ் – ஒரு டீஸ்பூன், 

எண்ணெய் – சிறிது, உப்பு – 1/4 டீஸ்பூன்.

செய்முறை:
குயே பஹ்லு
மைதா மாவு, பேக்கிங் பவுடரை சலிக்கவும். ஓர் அகலப் பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் சர்க்கரை கரையும் வரை 

லோ ஸ்பீடிலும், பிறகு ஹை ஸ்பீடிலும் வெள்ளையாக கெட்டியாக ஆகும் வரை நன்கு அடிக்கவும். 

பின் உப்பு, வெனிலா எசன்ஸ் மற்றும் சலித்து வைத்திருக்கும் மாவைச் சேர்த்து மெதுவாக ஒன்றுசேர கலந்து விடவும். 

குக்கரில் (அவனிலும் சமைக்கலாம்) ஒன்றரை கப் உப்பு பரவலாக போட்டு 

அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடியில் ரப்பரும், வெயிட்டும் இல்லாமல் மூடி சூடு செய்யவும். 

சூடு வந்ததும் சிறிய சில்வர் அல்லது அலுமினிய கப்களின் உள்ளே எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, 

குக்கரின் உள்ளே தட்டின் மேல் வைத்து மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். 

பிறகு திறந்து பார்த்தால் மேலே பொன்னிறமாக சிவந்து இருக்கும் (இல்லை யென்றால் இன்னும் 5 நிமிடம் வைக்கவும்). 

பின் வெளியே எடுத்து குச்சியால் ஓரத்தை ஒரு முறை ஒதுக்கி விட்டு, அதே குச்சியால் குத்தி எடுத்தால் வந்து விடும். சுட்டு எடுத்து, ஆறியதும் சுவைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)