லாபிஸ் கேக் செய்முறை | Lapis cake Recipe !





லாபிஸ் கேக் செய்முறை | Lapis cake Recipe !

0
தேவையானவை: 

மைதா மாவு – கால் கப், 

முட்டை – 2 (மாற்றாக கன்டென்ஸ்டு மில்க் பயன்படுத்த லாம், 

பொடித்த சர்க்கரை – அரை கப், 

வெண்ணெய் – அரை கப், 

உப்பு – 1/4 டீஸ்பூன், 

பட்டை (கொஞ்சம் கூடுதலாக), ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு ஆகிய வற்றைப் பொடித்த தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், 

விரும்பினால் வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், 

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், 

எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
லாபிஸ் கேக்
ஒரு விரல் அளவு உயரமும் அகலமும், ஒன்றரை சாண் நீளமும் கொண்ட ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பரை வைக்கவும் அல்லது வெண்ணெய் தடவவும். 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். 

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் இதில் சேர்த்து வெள்ளைக் கருவை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து விட்டு, 

வெண்ணெய், முட்டை கலவையை நன்கு மிருதுவாகும் வரை அடிக்கவும். 

அதில் உப்பு, பொடி, எசன்ஸ் சேர்த்து, பிறகு மாவு, பேக்கிங் பவுடரை சலித்துச் சேர்த்து கலக்கவும். 

பிரித்து வைத்திருக்கும் வெள்ளைக் கருவை லேசாக நுரை வர அடித்து, அதில் எலுமிச்சை சாறை சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும்.

நன்கு வெள்ளை நுரை போல் வரும் போது இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். 

க்ரீம் போல் நுரைத்து கெட்டியாக வந்ததும், வெண்ணெய், சர்க்கரை, மாவு, மஞ்சள் கரு கலவையோடு 

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, ஒரு மரக்கரண்டி யால் மென்மை யாகக் கலக்கவும். 

அவனை 200 டிகிரி ப்ரீஹீட் செய்து, பேக் செய்ய தயார் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் 

ஒன்றரை டேபிள் ஸ்பூன் மாவை ஊற்றி சமப்படுத்தி 8, 10 நிமிடங்கள் பேக் செய்து, 

மேலே பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து, அதன் மேல் அதே அளவு மாவை ஊற்றி சமப்படுத்தி அதே போல பேக் செய்யவும். 

இதே போல் எல்லா மாவையும் ஒவ்வோர் அடுக்கும் சிவக்க சிவக்க மேலே ஊற்றி முற்றிலும் பேக் செய்யவும். 

ஆறியதும் மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)