மீ கொரிங் செய்முறை | Mee Korin Recipe !





மீ கொரிங் செய்முறை | Mee Korin Recipe !

0
தேவையானவை: 

ப்ளைன் நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், 

பூண்டு – 2 பல், 

பச்சை மிளகாய் – ஒன்று, 

பெரிய வெங்காயம் – ஒன்று, 

நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு டேபி ஸ்பூன், 

பீன்ஸ் ஸ்ப்ரவ்ட் (முளை கட்டிய பீன்ஸ்) – ஒரு கைப்பிடி அளவு, 

கடுகு கீரை – ஒரு கொத்து, 

சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன், 

சோயா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், 

முட்டை – ஒன்று, 

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
மீ கொரிங் செய்முறை
தோல் நீக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாயைத் தட்டவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். 

நூடுல்ஸை மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் வேக வைத்து வடிக்கவும். 

அகன்ற வாணலியில் எண்ணெய் சூடானதும் தட்டிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், முட்டைகோஸ், உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

பாதி வதங்கியதும் சில்லி பேஸ்ட் மற்றும் சோயா சாஸ் சேர்த்துப் பிரட்டி, ஸ்ப்ரவ்ட் பீன்ஸ், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, 

முட்டை உடைத்து ஊற்றி, வேக வைத்த நூடுல்ஸை யும் சேர்த்து நன்கு பிரட்டி சூடு நன்கு ஏறியதும் இறக்கவும். 

குறிப்பு: 

அனைத்தையும் அதிக தீயில் வதக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)