சய் குயே செய்முறை | Chai Cui Recipe !





சய் குயே செய்முறை | Chai Cui Recipe !

0
தேவையானவை: 

ஸ்டப்பிங்க்கு: 

துருவிய ஜிகாமா கிழங்கு – 2 கப் (இது மலேசிய கிழங்கு. 

இதற்குப் பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு உபயோகிக்க லாம்), 

துருவிய கேரட் – ஒரு கப், 

சின்ன வெங்காயம் – 10, 

பூண்டு – 2 பல், 

சர்க்கரை – ஒரு ஸ்பூன், 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். 

மேல் மாவுக்கு:

மைதா மாவு – 3 கப், 

தண்ணீர் – 2 டம்ளர், 

வாழை இலைகள் – தேவைக்கேற்ப, 

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சய் குயே
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். 

அகன்ற வாணலியில் எண்ணெய் சூடானதும் பூண்டு, வெங்காயம், உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

பின்பு துருவிய கிழங்கு, கேரட் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்த தீயில் வைத்து, அடிப்பிடிக்காமல் இடையிடையே கிளறவும். 

சிறிது நேரத்தில் நிறம் மாறி சுருங்கி வெந்ததும், ருசி பார்த்து உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு பிரட்டி ஆற விடவும். 

ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பை எடுத்து, அதில் நன்கு வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிசையவும். 

ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வைக்கவும். வாழை இலைகளைக் கழுவி சிறுசிறு துண்டுக ளாக்கவும். 

அதில் ஒரு துண்டில் சிறிது எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவை எடுத்துத் தட்டி (நடுவில் கொஞ்சம் தடிமனா கவும், 

ஓரத்தில் மெல்லிய தாகவும்), அதன் நடுவே ஆறிய கிழங்கை அதற்கேற்றார் போல வைத்து மூடி, ஓரங்களை ஒட்டும் அளவுக்கு நன்கு அழுத்தி விடவும். 

அதே போல எல்லா வற்றையும் வாழை இலைத் துண்டில் தேவையான அளவு வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 

இதை அப்படியே சாப்பிடலாம், சில்லி சாஸ்/பீநட் சாஸ் தொட்டும் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)